ஜம்மு -காஷ்மீர்: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நவ்காம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக ஊடுவ முயன்ற பயங்கரவாதிகள் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜம்மு -காஷ்மீர்: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நவ்காம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான நவ்காமில், இந்திய பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி வழியாக சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது தெரியவந்தது.

உடனே பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்திருந்த அவர்கள், பிற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மூலம், இந்திய ராணுவ முகாம்களில் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் தீட்டியிருந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP