ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக்காவலில் இல்லை; வீட்டு விருந்தினர்கள்: ஜிதேந்திர சிங்

ஜம்மு- காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சகல வசதிகளுடன் விருந்தினர்கள் போன்று விஐபி பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
 | 

ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக்காவலில் இல்லை; வீட்டு விருந்தினர்கள்: ஜிதேந்திர சிங்

ஜம்மு- காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சகல வசதிகளுடன் விருந்தினர்கள் போன்று விஐபி பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதை தொடர்ந்து ஜம்முவில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். 

இந்நிலையில், நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த பேரணி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், அரசியல் தலைவர்கள் வி.ஐ.பி பங்களாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜிம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.  ஹாலிவுட் திரைப்படங்களின் குறுந்தகடுகள் மற்றும் அவர்கள் விரும்பும் ரொட்டி கூட அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் வீட்டுக்காவலில் இல்லை, வீட்டு விருந்தினர்கள் போல் நடத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள், ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 4,000 பேர் வரை இருக்கலாம் என்றும், அவர்களை 18 மாதங்களுக்கு மேலும் அரசு தடுத்து வைக்காது என தெரிவித்தார். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், வட மாநிலத்தின் எல்லைகளை மீட்டெடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். முன்னதாக, 370 வது பிரிவை ரத்து செய்வதும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதும் மதத்துடன் இணைக்கப்படக்கூடாது என்று சிங் கூறினார். 

Newstm.in
 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP