மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 1!!

லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், இந்திய தேசியவாத கொள்கைக்கும், மற்ற நாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை மிக தெளிவாகவும், அழகாகவும் ஒப்பீடு செய்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு, அவரது அழகான பதில்கள் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
 | 

இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், இங்கு இந்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கருதுகின்றனர். இது எந்த அளவு உண்மை என்ற கேள்விக்கு, "இல்லை" என்று விடையளித்த அவர், இந்தியா என்பது ஓர் நாடு என்பதை விட ஓர் நாகரீகம் என்பதே உண்மை. எங்களுக்குள் பல வகையான வேறுபாடுகள் உள்ளன. மொழி, மதம், இனம் என பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளுடன் அமைய பெற்றதுதான் இந்தியா. அனைவரும் ஒரே மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதோ, ஒரே மொழியினை பேச வேண்டும் என்பதோ அவசியமே இல்லை. இந்திய நாகரீகத்திற்கு அழகே இந்த வேறுபாடுகள் தான். இதை மக்களும் உணர்ந்து தான் செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், மேற்கத்திய அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அழகாக மேற்கோள் காட்டியுள்ளார். "மேற்கத்திய அரசியலுக்கும், இந்திய அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவுக்கு என்ன வேண்டுமோ அதை நிலை நிறுத்துவதும், இந்திய கலாச்சாரத்தை முழுவதுமாக நிலை நாட்டுவதும் தான் முக்கியம், அதற்கான பாதையில் தான் தற்போது இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதில்தான் மிகபெரும் ஜனநாயகத்தின் பொருளே உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மிக்கவாரும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் தான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் இந்தியாவையும், அவற்றையும் ஒப்பீடு செய்வதே கடினமான ஒன்று தான்".

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 2!!

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 3!!

தொடரும்..........

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP