மக்கள் புடைசூழ ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி!

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 | 

மக்கள் புடைசூழ ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி!

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, இன்று ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து, இன்று ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் விழா நடைபெற்று வருகிறது. 

மக்கள் புடைசூழ ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி!

இந்த பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளனர். 

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அக்கட்சி சார்பில் 3 எம்.எல்.ஏக்களை அனுப்பிவைத்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விழாவில் பங்கேற்றுள்ளார். 

இந்த விழா முடிந்ததும் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP