பயங்கரவாதிகளின் வேடந்தாங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்துவது சிரமம் - ஜெய்சங்கர்

"பாகிஸ்தானுடன் பேசுவதில் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பயங்கரவாதிகளின் வேடந்தாங்கலாக திகழ்ந்துவரும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லாதது. இஸ்லாமாபாத் தீவிரவாதத் தொழிற்சாலையாக மாறிக் கொண்டு வருகிறது" என ஜெய்சங்கர் நம் அண்டை நாடு குறித்து கருத்து கூறியுள்ளார்.
 | 

பயங்கரவாதிகளின் வேடந்தாங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்துவது சிரமம் - ஜெய்சங்கர்

"பாகிஸ்தானுடன் பேசுவதில் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பயங்கரவாதிகளின் வேடந்தாங்கலாக திகழ்ந்துவரும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லாதது. இஸ்லாமாபாத் தீவிரவாதத் தொழிற்சாலையாக மாறிக் கொண்டு வருகிறது" என அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம் அண்டை நாடு குறித்து கருத்து கூறியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அதிலும் பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவை நிராகரித்ததோடு மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு பல வழிகளில் இடையூறு அளித்த வந்தது. தற்போது பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் முயற்சித்து கொண்டிருக்கிறது. 

இந்தியா பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட காஷ்மீர் பிரச்சனை தான் காரணம் என்பதை என்னால் ஏற்க முடியாது. இந்த காஷ்மீர் விவகாரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஒன்றும் நம்முடன் தோழமையுடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கவில்லை.  

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது எல்லோரும் அறிந்த ஒன்றே. மும்பை பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல. அவர்களுக்கு இந்தியா மீது குற்றம் சுமத்த தேவை ஒரு காரணம், அதற்காகதான் தற்போது காஷ்மீர் பிரச்சனையை பெரிது படுத்திக் கொண்டிருக்கின்றனர்".

இந்தியா பாகிஸ்தான் இருவருக்குமான பிரச்சனை தான் என்ன என்ற கேள்விக்கு,  பிரச்சனை அவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. இந்தியாவை எதிரிகளாக பார்க்க வேண்டும் என்ற தவறான கண்ணோட்டமே, இரு நாடுகளின் இந்த நிலைக்கு காரணமாகும். பாகிஸ்தானின் இந்த எண்ணம் மாறாமல் இங்கே எதையும் மாற்ற இயலாது" என்று அவர் கூறினார்.

மேலும், "காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 திரும்ப பெறப்பட்டதை சீனா தவறாக புரிந்து கொண்டது. சில தினங்களுக்கு முன்பு பெய்ஜிங் சென்று, நாம் என்ன செய்துள்ளோம் என்பதை தெளிவாக எடுத்துரைத்ததில் தற்போது சீனா உடனான கருத்து வேறுபாடு மறைய தொடங்கியுள்ளது" எனவும்  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, "பாகிஸ்தானுடன் பேசுவதில் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பயங்கரவாதிகளின் வேடந்தாங்கலாக திகழ்ந்துவரும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லாதது. இஸ்லாமாபாத் தீவிரவாதத் தொழிற்சாலையாக மாறிக் கொண்டு வருகிறது" என்று நம் அண்டை நாடு குறித்து அப்போது அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

Newstm.in

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP