அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்!!!

அயோத்தியா வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை தொடர்ந்து, அங்கு எழுப்பப்படும் ராமர் கோவிலுக்காத 2,100 கிலோ எடை கொண்ட பெரிய மணியை உருவாக்கி வருகிறார் இஸ்லாமிய கைவினைஞரான இக்பால்.
 | 

அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 9ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, அந்த நிலத்தை அரசாங்க நிலமென்று அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்ததோடு, இஸ்லாமியர்களுக்கென்று அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலமும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை தொடர்ந்து, அங்கு ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பணிகள் வெரு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், கோவிலுக்கான மணி, விகாஸ் மிட்டல் என்பவரின் பணிமனையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முடிவடையும் நிலையில் இருக்கும், ராமர் கோவிலில் அணிவிக்கப்போகும் இந்த மணியினை முழுமையாக தயாரித்தவர் அங்கு வேலை செய்யும் இக்பால் என்னும் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அயோத்தியாவில் எழுப்பப்படும் ராமர் கோவிலுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த மணி 2,100 கிலோ எடையும், 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேலும், இதன் விலை 10 முதல் 12 லட்சங்கள் வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் போராட்டம் வெடிக்குமோ என்ற அனைவரின் பயத்தையும் பொய்யாக்கி இரு மதத்தவரின் நட்புறவை வெகுவாக எடுத்துரைத்துள்ளது இச்சம்பவம். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP