ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக திட்டமா?

மத்திய அரசுடனான மோதல் அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது குறித்து உர்ஜித் படேல் பரிசீலித்து வருவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக திட்டமா?

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக உர்ஜித் படேல் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து அவர் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இந்நிலையில், வங்கிகளை கட்டுப்படுத்தும் இடத்தில் உள்ள ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருந்தது? அதிகப்படியான கடன் வழங்கப்படுவதை ரிசர்வ் வங்கி ஏன் கட்டுப்படுத்தவில்லை? என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்திருந்தார். கடந்த 2008-2014 வரையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதுபோன்று அதிகப்படியான கடன் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அதே சமயம், வங்கிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதலான தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்று மத்திய அரசை ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது குறித்து உர்ஜித் படேல் பரிசீலித்து வருவது தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஆங்கில செய்தி ஊடகமான சி.என்.பி.சி.-டிவி 18 தெரிவிக்கிறது. மத்திய அரசுக்கும், அவருக்கும் இடையிலான மோதல், தீர்வு காண முடியாத நிலையை எட்டியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP