'கோவா முதல்வர் பாரிக்கர் உயிருடன் உள்ளாரா?' கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

உடல்நலம் சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த சில வாரங்களாக வெளியே வராத நிலையில், அவர் உயிருடன் உள்ளாரா, இல்லையா, என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 | 

'கோவா முதல்வர் பாரிக்கர் உயிருடன் உள்ளாரா?' கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

உடல்நலம் சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த சில வாரங்களாக வெளியே வராத நிலையில், அவர் உயிருடன் உள்ளாரா, இல்லையா, என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கோவா முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் அவரது வீட்டிலேயே மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு, அங்கு கொண்டு வரப்பட்டார். இரு தினங்களுக்கு முன், அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்தார். 

கடந்த இரண்டு வாரங்களாக, மனோகர் பாரிக்கரை யாருமே பார்க்காத நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா, என்ற கேள்வி எழுந்துள்ளதாக கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர தேஷ்பிரபு தெரிவித்தார். "ஆமாம், அது பற்றி நாங்கள் பேசுகிறோம். முதல்வர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். 

வீட்டிலேயே நவீன மருத்துவமனை போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிப்பதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர்கள் சந்திப்பு கூட வீட்டிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். முதல்வர் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு பாரதிய ஜனதாவை சேர்ந்த பலர் சட்டவிரோதமாக முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டினார். மனோகர் பாரிக்கர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை பொதுமக்களிடம் பா.ஜ சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேஷ்பிரபுவின் கருத்துகளுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் விடுத்துள்ளது. அரசியல் நாகரீகம் இல்லாமல் அவர் பேசுவதாகவும், "மிகுந்த விரக்தியில் அவர் இவ்வாறு பேசி வருகிறார்" என்றும் கோவா பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் சதானந்த் சேத் தனவாடே கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP