பங்குசந்தையில் குதிக்கும் ஐ.ஆர்.சி.டி.சி., : நீங்களும் பங்குதாரர் ஆகலாம்!

அரசு சார் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி தற்போது, பங்கு சந்தையில் நுழைந்து அதன் மூலம், 645 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
 | 

பங்குசந்தையில் குதிக்கும் ஐ.ஆர்.சி.டி.சி., : நீங்களும் பங்குதாரர் ஆகலாம்!

அரசு சார் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி தற்போது, பங்குசந்தையில் நுழைந்து அதன் மூலம், 645 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. 

ஐ.ஆர்.சி.டி.சி என்பது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு, ரயில் பயணிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளும் ஓர் அரசு சார் நிறுவனம்.

இந்நிறுவனம் தற்போது, பங்கு சந்தையில் நுழைந்து அதன் மூலம், 645 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. 
10 ரூபாய் முகமதிப்புடைய 2 கோடி பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இப்பங்குகளை பங்குசந்தையில் வாங்கலாம் எனவும், ஒரு பங்கின் விலை, 345 - 365 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இதன் மூலம், அரசின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், 12.5 சதவீத பங்குகளை விற்கவுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. ஐபிஓ குறித்து அறியப்பட வேண்டியவை : 

- இந்திய ரயில்வே துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் அரசு சார் நிறுவனம்.

- ரயில்வே துறை நிறுவனங்களான ரைட்ஸ், ரயில் விகாஸ் நிகாம் மற்றும் இர்கான் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது ஐ.ஆர்.சி.டி.சி யும் பங்குசந்தைக்குள் குதித்துள்ளது.

- ஐடிபிஐ, எஸ்பிஐ மற்றும் எஸ் செக்யூரிடீஸ் ஆகிய மூன்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஐபிஓ வின் முக்கிய மேலாளர்களாக பங்கு வகிக்கிறது.

- அலங்கிட் லிமிடெட் நிறுவனமே, ஐ.ஆர்.சி.டி.சி ஐபிஓ வின் பதிவாளர்.

- 10 ரூபாய் முகமதிப்புடைய 2 கோடி பங்குகளை விற்க ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

- வரும் அக்டோபர் 5 முதல் இயக்கப்படவுள்ள, டெல்லி லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ், முழுவதுமாக ஐ.ஆர்.சி.டி.சி யின் கட்டுப்பாட்டுக்குள் இயக்கப்படப் போகும் முதல் ரயிலாகும்.

- ஐ.ஆர்.சி.டி.சி யின் கடந்த ஆண்டு விற்பனையை விட இந்த ஆண்டின் விற்பனை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனியார் பங்களிப்புடன், ரயில்வே துறையில் பல புதுமைகளை புகுத்தும் முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது அந்த நிறுவன பங்குகள் பொது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றை வாங்க விரும்புவோர், இம்மாதம் 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP