கணவரிடம் நடத்தப்படும் விசாரணைப் பற்றி கவலையில்லை: பிரியங்கா  

தன் கணவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதுபற்றி தமக்கு கவலையில்லை என்று சோனியாவின் மகளும், உத்தரப்பிரதேச மாநில(கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா வதேரா தெரிவித்துள்ளார்.
 | 

கணவரிடம் நடத்தப்படும் விசாரணைப் பற்றி கவலையில்லை: பிரியங்கா  

தன்  கணவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதுபற்றி தமக்கு கவலையில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகளும், உத்தரப்பிரதேச மாநில(கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா வதேரா தெரிவித்துள்ளார்.

லண்டனில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்தத் தலைவரான சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவர் கடந்த 6-ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து ஐந்து நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் ராபர்ட் வதேராவும், அவரது தாயாரும் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். இன்று அவரிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்த விசாரணை குறித்து,  பிரியங்கா வதேராவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், "என் கணவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து நான் கவலை கொள்ளவில்லை. இதுபோன்ற விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.  அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. 

வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, அதில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக நான் ஆற்ற வேண்டிய பணிகளை மட்டும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்வேன்" என பிரியங்கா பதிலளித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP