ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்..

தொலை தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட 'டோக்கன்' முறையில் இனி முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 | 

ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்..

தொலை தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட இனி 'டோக்கன்' முறையில் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் அதிகமாக இருக்கும். சாதாரண மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் பொருட்டு முன்பதிவில்லாத பெட்டிகள் 2 அலலது 3 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த பெட்டிகளில் பயணம் செய்வோர் ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருப்பர். ரயில் மேடையில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள், பயணிகளை வரிசையில் பெட்டிக்குள் அனுப்பி வைப்பர்.

ஒரு சில ரயில் நிலையங்களில், வரிசையில் நின்றாலும், மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறுவர். முக்கிய நாட்களில் இந்தப் பெட்டிகளில் வாசலில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்களையும் நாம் காண முடியும். இதனால் சில சமயங்களில் இத்தகையவர்கள் விபத்தில் சிக்குவதுண்டு.

ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்..ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்..

இதனை தடுக்க, இந்திய ரயில்வே புதிய விதிமுறைகளை கொண்டுவரவுள்ளது. முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்ய விரும்புவோர் ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்து தங்களது கைரேகையை அளித்து டோக்கன் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அந்த டோக்கனின்படி வரிசைக்கிரமமாக ரயில் பெட்டியில் இடம் அளிக்கப்படும். இதற்காக ரயில் மேடையில் ஒரு ரயில்வே ஊழியர் இருப்பார். ரயிலில் எவ்வளவு பயணிகள் செல்ல முடியுமோ அதற்கேற்பவே டோக்கன் வழங்கப்படும்.

இதனால் ரயிலில் மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய முடியும் என்றும் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது . 

முதற்கட்டமாக மும்பை - லக்னோ இடையே புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சோதனையானது நடைமுறையில் சோதிக்கப்பட்டு வருகிறது. சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ந்து அனைத்து ரயில்களிலும் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP