வங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!

வங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ரிசர்வ் வங்கி, சி.எம்.எஸ்(Complaint Management System) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

வங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க  புதிய செயலி அறிமுகம்!

வங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ரிசர்வ் வங்கி, சி.எம்.எஸ்(Complaint Management System) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருவதன் காரணமாக, வங்கிகளில் அதிகமான அபராதம் வசூலித்தல், காரணம் தெரியாமல் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்தல் என புகார்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. 

இதையடுத்து, வங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ரிசர்வ் வங்கி, சி.எம்.எஸ்(Complaint Management System) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். அனைத்து நிதி நிறுவனங்களும் இதில் அடங்கும். 

புகார்கள் தெரிவிக்கப்பட்ட பின்னரும், புகாரின் நிலை என்ன என்பது குறித்து நாம் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம். முதற்கட்ட நடவடிக்கை நமக்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்முறையீடு செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் லேப்டாப் ஆகிய இரண்டிலும் இந்த செயலியை உபயோகிக்க முடியும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP