கொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்கியது!

கொல்கத்தாவில் விக்யான் சமாகம் என்ற சர்வதேச அறிவியல் திருவிழாவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்.
 | 

கொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்கியது!

கொல்கத்தாவில்  விக்யான் சமாகம் என்ற சர்வதேச அறிவியல் திருவிழாவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார். 

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை தொழில் நிபுணர்கள், விவசாயிகள், அறிவியலாளர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியிலும், சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 

அதன்படி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டர் மற்றும் கொல்கத்தா அறிவியல் நகரம் ஆகிய 2 இடங்களில் 5-வது சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா நடைபெறுகிறது. இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தொடங்கி வைத்தார். இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த அறிவியல் திருவிழாவில், பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு உள்பட 28 வகையான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டு இந்த அறிவியல் விழாவில் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP