விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்; அயோத்தியில் ராமர் கோவில் - அட்டகாசமான பாஜகவின் தேர்தல் அறிக்கை!

2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
 | 

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்; அயோத்தியில் ராமர் கோவில் - அட்டகாசமான பாஜகவின் தேர்தல் அறிக்கை!

2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 

டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதலில் பேசி, நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தொடர்நது, 'உறுதிமொழி பத்திரம்' என்ற பெயரில் பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா வெளியிட்டனர். 

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: -

►  5 ஆண்டுகள் வரை, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டு வழங்கப்படும். 

►  கிராமப்புற வளர்ச்சிக்காக 25 லட்சம் கோடி ஒதுக்கப்படும். 

►  சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 

►  தேச பாதுகாப்புக்கு மோடியின் அரசு முன்னுரிமை அளிக்கும். தீவிரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்று பாஜக உறுதி அளிக்கிறது. 

►  அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனைத்து வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

►  2022 ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும். 

►  அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிதாக்கப்படும்

►  ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும். 

►  60,000 கிமீ தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க நடவடிக்கை.

►  சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்

►  பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

►  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நனவாக்கும் வகையில் நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

►  நதிகளை இணைக்க புதிய ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும்.

►  நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 

►  இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும். 

►  பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பள்ளிகள் அளவில் சமஸ்கிருதம் கற்பித்தல் அதிகரிக்கப்படும். 

►  விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.

►  கல்வி பாடத்திட்டங்களில், விளையாட்டு குறித்த புதிய பாடத்திட்டங்கள் இடம்பெறும்

என்பன போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP