இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் பதிவு ரத்து... மத்திய அரசு அதிரடி!

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் தன்னார்வ அமைப்பின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியுதவிகள் குறித்த தகவல்களை தராததையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
 | 

இந்தியாவில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள், வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறும் நிலையில், அந்நிய நிதியுதவி முறைப்படுத்துதல் சட்டத்தின்கீழ், முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்துள்ள நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு வரும் நிதியுதவி, வரவு -செலவு உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு நிதியாண்டிலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறாதபட்சத்தில் கூட  அதுகுறித்தும் ஆன்-லைனில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் கடந்த சில ஆண்டுகளாக, தனது வரவு -செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக அந்நிறுவனத்துக்கு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும் எவ்வித பலனும் இல்லாததையடுத்து, இந்த தன்னார்வ அமைப்பின் பதிவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது.

கிராமப்புற வளர்ச்சி, கல்வி, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு, 1996 -இல் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன், பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP