இந்திரா காந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 | 

இந்திரா காந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திராகாந்தி, சுதந்திர இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்த சமயத்தில் சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பியதால் சீக்கியர்களின் ஆளாகிய இந்திராகாந்தி, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP