தொடருகிறது இண்டிகோ நிறுவனத்தின் திணறல் - இன்றும் 130 விமானங்கள் ரத்து

இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில், பைலட் பற்றாக்குறையால் கடந்த சில நாள்களாக சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் 130 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
 | 

தொடருகிறது இண்டிகோ நிறுவனத்தின் திணறல் - இன்றும் 130 விமானங்கள் ரத்து

இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில், பைலட் பற்றாக்குறையால் கடந்த சில நாள்களாக சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் 130 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுமார் 210 விமானங்களுடன் நாளொன்றுக்கு 1,300 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கக் கூடியது இண்டிகோ நிறுவனம். ஆனால், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் பைலட் பற்றாக்குறையால் அந்நிறுவனம் திணறி வருகிறது. கடைசி நிமிடங்களில் விமானப் பயணம் ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 30 விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

கடந்த புதன்கிழமை 49 விமானங்களையும், வியாழக்கிழமை 70 விமானங்களையும் இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. பைலட் பற்றாக்குறை என்பதையும் தாண்டி, மோசமான வானிலை, விமான நிலைய பராமரிப்பு பணி போன்ற காரணங்களாலும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.  இன்று 130 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது இண்டிகோ நிறுவனம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP