Logo

இந்தியாவின் புதிய வரைபடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் காணவில்லை - டிடிபி அமைச்சர் குற்றச்சாட்டு!!!

கடந்த மாதம் மத்திய அமைச்சகம் வெளிட்டிருந்த புதிய இந்திய வரைபடத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான அமராவதி குறிப்பிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர் ஜெயதேவ் கல்லா.
 | 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டு அதை இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டிருந்தது மத்திய அரசு. இதில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான அமராவதி குறிப்பிடப்படவில்லை என்று மக்களவையின் கூட்டுத்தொடரில் குற்றம் சாட்டியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர் ஜெயதேவ் கல்லா.

மேலும், இது ஆந்திரப் பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாது, இதை தலைநகரமாக அறிவித்த பிரதமருக்கும் அவமானம் என்றும், அமராவதி இல்லாமல் அமைந்திருக்கும் இந்த வரைபடம், மாநிலத்தின் நிதியுதவியும் பாதிக்கும் என்பதால், விரைவில் அமராவதியையும் இணைத்து வரைபடத்தை மாற்றியமைத்து வெளியிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP