கடைக்காரரின் தவறால் மாட்டிறைச்சி சாப்பிட்ட இந்தியர் - பரிகார பயணத்துக்கு பணம் கேட்கிறார்

நியூஸிலாந்தில் வசிக்கும் ஜஸ்விந்தர் சிங் என்ற இந்தியர், சூப்பர்மார்க்கெட்டில், ‘ஆட்டிறைச்சி’ வாங்கிச் சென்றார். ஆனால், அது மாட்டிறைச்சி என தெரியவந்தது. இதனால், பரிகார பூஜைக்காக இந்தியா செல்ல அந்நிறுவனத்திடம் பணம் கேட்டுள்ளார் அவர்.
 | 

கடைக்காரரின் தவறால் மாட்டிறைச்சி சாப்பிட்ட இந்தியர் - பரிகார பயணத்துக்கு பணம் கேட்கிறார்

நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர், சூப்பர்மார்க்கெட் கடை ஊழியர்களின் தவறால் மாட்டிறைச்சி சாப்பிட நேர்ந்தது. இதையடுத்து, பரிகார பூஜைக்காக இந்தியா செல்வதற்கான பயணச் செலவை அந்த நிறுவனம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் அவர்.

ஜஸ்விந்தர் பால் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு முடிதிருத்தக நிலையம் நடத்தி வருகிறார் அவர். இந்நிலையில், அங்குள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில், ‘ஆட்டிறைச்சி’ என்ற பெயரில் கவரில் விற்கபட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அவர் வாங்கிச் சென்றார். வீட்டில் சமைத்து சாப்பிட்டபோது, அது ஆட்டிறைச்சி போன்று இல்லை என்றும், மாட்டிறைச்சியாக இருக்கலாம் என்றும் ஜஸ்விந்தர் பாலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, சூப்பர்மார்க்கெட் நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார். அப்போது, ஊழியர்கள் சிலரது தவறால், மாட்டிறைச்சி மீது ஆட்டிறைச்சி என்ற பெயர் ஒட்டப்பட்டு விட்டதாகவும், இந்தத் தவறுக்காக 200 டாலர் இழப்பீடு பெற்றுக் கொள்ளுமாறும் கடை நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், ஜஸ்விந்தர் சிங் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியா சென்று, தன்னை புனிதப்படுத்திக் கொள்வதற்கான பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும், அதற்கான பயண செலவை சூப்பர் மார்க்கெட் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதை சூப்பர்மார்க்கெட் நிர்வாகம் ஏற்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜஸ்விந்தர் சிங் முடிவு செய்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP