இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியது !

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணித்த 3 கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
 | 

இந்திய கடற்படை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்,  இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் அரபிக்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டபோது, அந்த கப்பலில் இருந்த ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் கடந்த வாரம் வானில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாகவும், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய பயனில்லாமல் போயிற்று என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், வீரர்கள் ஹெலிகாப்டரை சாமர்த்தியமாக கடலில் இறக்கிவிட்டு, அதில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும், ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP