குல்பூஷண் ஜாதவை சந்திக்கும் இந்திய தூதரக அதிகாரிகள்!

பாகிஸ்தான் நாட்டின் சிறையிலுள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் நாளை சந்திக்க உள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
 | 

குல்பூஷண் ஜாதவை சந்திக்கும் இந்திய தூதரக அதிகாரிகள்!

பாகிஸ்தான் நாட்டின் சிறையிலுள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் நாளை சந்திக்க உள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ், ஈரான் நாட்டிலுள்ள சபாஹர்(Chabhahar) துறைமுகத்தில் கட்டுமானப்பணியில் துணை கான்ட்ராக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் உளவாளிகள், அவரை அங்கிருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு கடத்திச் சென்றனர். பின்னர் 'உளவாளி' என்று கூறி அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் ஜாதவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. குல்பூஷண் ஜாதவ் உளவாளி இல்லை என்றும், அவர், ஈரானில் சபாஹர் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளார் என்றும் இந்திய தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, குல்பூஷண் ஜாதவின் மீதான மரண தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், அவரை சந்திக்க இந்திய துாதரக அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், பாகிஸ்தான் சிறையிலுள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாளை குல்பூஷண்  ஜாதவை நேரடியாக சந்திக்கவுள்ளதாகவும் அந்நாட்டின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP