தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா உதவத் தயார்: ராஜ்நாத் சிங் அதிரடி!

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியா உதவத் தயாராக உள்ளது. ஏனென்றால் தனியாக ஒரு நாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது கடினம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா உதவத் தயார்: ராஜ்நாத் சிங் அதிரடி!

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியா உதவத் தயாராக உள்ளது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் வருகிற டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, அங்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி தவிர முக்கிய மத்திய அமைச்சர்கள், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ராகுல் காந்தி, காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது 2 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடாத்தியுள்ளதாக கூறுகிறார். 

தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா உதவத் தயார்: ராஜ்நாத் சிங் அதிரடி!

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என இந்தியா உலக நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகளை ஒழிக்க ஆப்கானிஸ்தான், அமெரிக்காவின் உதவியை நாடுகிறது. அதுபோல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேவைப்பட்டால் இந்தியாவின் உதவியை நாடலாம். பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியா உதவத் தயார். ஏனென்றால் தனியாக ஒரு நாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது கடினம்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP