Logo

மோடி ஆட்சியினால் முன்னேறி வருகிறது இந்தியா - பிரகாஷ் ஜவடேக்கர்!!

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று இன்றுடன் 180 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசின் முடிவுகளை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் குறிப்பிட்டுள்ளார்.
 | 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் திரும்ப பெற உத்தரவு பிறப்பித்த மத்திய அரசின் முடிவை தொடர்ந்து, இதுவரை ஜம்மு காஷ்மீர் கண்டிருந்த பயங்கரவாத தாக்குதல் பலமடங்கு குறைந்துள்ளதாக கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர். பிரதமர் மோடியின் இரண்டாவது முறை ஆட்சி காலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப பெற்றது நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு வித்திட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதமர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம் என கூறிய அவர், ரஃபேல் போர் விமானம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் பிரதேச மக்களின் வாழ்வில் அமைதி நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்திய மக்களின் நிலை பெரிய அளவில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காகவும் பிரதமர் மோடி மேற்கொள்ளும் செயல்முறைகள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதார சரிவிற்கு பாஜக ஆட்சியை பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போதைய பொருளாதார மந்த நிலையினால் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை எனவும் சர்வதேச நாடுகள் வரை இதனால் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறிய அவர், இந்நிலையை சீர் செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகவும், விரைவில் பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை காணலாம் எனவும் உறுதியளித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP