இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தால் தடைபட்ட திருமணம்

ராஜஸ்தானைச் சேர்ந்த மஹேந்திர சிங்கிற்கும், பாகிஸ்தானை சேர்ந்த ஜகன் கன்வாருடன் மார்ச் 8ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தால் அந்தத் திருமணம் தடைபட்டுள்ளது.
 | 

இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தால் தடைபட்ட திருமணம்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மணமகளுக்கும் நடைபெறவிருந்த திருமணம் தடைபட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹேந்திர சிங். இவருக்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சினோய் கிராமத்தைச் சேர்ந்த ஜகன் கன்வாருடன் மார்ச் 8ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால் மஹேந்திர சிங்கிற்கு சிக்கல் உருவானது. முதலில் பாகிஸ்தான் செல்வதற்கான விசா கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் ஒருவரின் உதவி காரணமாக, மஹேந்திர சிங் உள்பட 5 பேருக்கு மட்டுமே விசா கிடைத்தது. 

இதற்கிடையே, உறவினர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ்களை மஹேந்திர சிங் வழங்கிவிட்டார். அதே சமயம், அவர்கள் பயணிப்பதாக திட்டமிடப்பட்டிருந்த தார் எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் நிறுத்திவிட்டது. இவ்வாறு ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், மஹேந்திர சிங் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார். உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேறொரு தினத்தில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP