உலக மதங்களின் தொட்டிலாக இந்தியா திகழ்கிறது: மோடி பேச்சு

அனைத்து மதங்களின் தொட்டிலாக இந்தியா திகழ்வதாக இஸ்லாமிய பாரம்பரியம் புரிதல், ஊக்குவித்தல் மற்றும் நவீனத்துவம் என்றத் தலைப்பிலான மாநாட்டில் பேசினார்.
 | 

உலக மதங்களின் தொட்டிலாக இந்தியா திகழ்கிறது: மோடி பேச்சு

உலக மதங்களின் தொட்டிலாக இந்தியா திகழ்கிறது: மோடி பேச்சுஅனைத்து மதங்களின் தொட்டிலாக இந்தியா திகழ்வதாக இஸ்லாமிய பாரம்பரியம் புரிதல், ஊக்குவித்தல் மற்றும் நவீனத்துவம் என்றத் தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். 

டெல்லியில் இன்று இஸ்லாமிய பாரம்பரியம் புரிதல், ஊக்குவித்தல் மற்றும் நவீனத்துவம் என்ற தலைப்பில் மாநாடு நடந்தது. பிரதமர் மோடி, ஜோர்டான் மன்னர்  இரண்டாம் அப்துல்லா உள்ளிட்டவர்கள் அதில் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மதமும் மனிதனுக்கு மதிப்பளிக்க தான் போதிக்கிறது. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத தூண்டுதல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் என்பது எந்தவொரு மதத்துக்கும் எதிரானது ஆல்ல.  சில இளைஞர்களை தவறாக வழிநடத்தி செல்லும் மனநிலைக்கு தான் எதிரானது.

இந்திய ஜனநாயகம் என்பது பழமையான பன்முகத் தன்மையை கொண்டது. அனைத்து மதங்களின் தொட்டிலாக இந்தியா விளங்குகிறது. அனைத்து மதநம்பிக்கைகளும் மனித மதிப்புகளை ஊக்குவிக்கிறது. அதனால், நமது இளைஞர்கள் இஸ்லாமின் மனிதநேய நோக்கங்களோடு தங்களை இணைத்து கொள்ள வேண்டும்.  நவீன தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்தும் திறன் பெற்றிருக்கவும் வேண்டும்" என அவர் பேசினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP