இந்தியா பாதுகாப்பான ஒருவரின் கையில் தான் உள்ளது - பிரதமர் மோடியை ராஜ்நாத் புகழாரம்!!!

இந்தியா பாதுகாப்பான ஒருவரின் கைகளில் தான் உள்ளதென்றும், அந்த நிம்பிக்கையுடன் மக்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றும் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 | 

இந்தியா பாதுகாப்பான ஒருவரின் கையில் தான் உள்ளது - பிரதமர் மோடியை ராஜ்நாத் புகழாரம்!!!

இந்தியா பாதுகாப்பான ஒருவரின் கைகளில் தான் உள்ளதென்றும், அந்த நிம்பிக்கையுடன் மக்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றும் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானங்கள் அனைத்தும் தீர்க்கமானதாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். நாடு பாதுகாப்பான ஒருவரிடம் இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். இப்போது இந்திய மக்களுக்கு அந்த நிம்மதியை தந்துள்ளார் பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்தியா பாதுகாப்பான ஒருவரின் கைகளில் உள்ளதாகவும், அவரின் அரவணைப்பினால் இந்தியா சர்வதேச நாடுகளின் முன்பு தலை நிமிர்ந்து நிற்பதாகவும் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களின் பார்வையில், அமெரிக்க என்ற நாடு தான் முதலீடு செய்வதற்கேற்ற நாடாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அமெரிக்காவை பார்க்கும் அனைவரும் இந்தியாவையும் பார்க்கின்றனர். அந்த அளவு இந்தியாவை வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு சென்றுள்ளார் மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையாடலின் போது தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் உள்துறை அமைச்சராக இருந்த போது தொடங்கிய இந்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதே நல்லது என்றும், அதன் மூலம் நம் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை அறிய முடியும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், பாரதிய ஜனதா கட்சி மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் தான் பதவியில் அமருமே தவிர நாற்காலியின் மீதிருக்கும் மோகத்தால் அல்ல என்றும் கூறியுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP