சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிய சுயேட்சை எம்.எல்.ஏக்களின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 | 

கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த வாரம் இரு நாட்கள்(ஜூலை 18 & 19) விவாதம் நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை அன்றைய தினமே(ஜூலை 19) நடத்த வேண்டும் என்று ஆளுநர் சபாநாயகருக்கு இருமுறை அறிவுறுத்தியிருந்தார். ஆனால், சபாநாயகர் மற்றும் முதல்வர் அதற்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து விவாதம் திங்கட்கிழமைக்கு (ஜூலை 22) ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து, ஆளுநர் காலக்கெடு விதித்ததற்கு தடை கோரி முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இதற்கிடையே, பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என்று தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP