டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் மோடி

ஒவ்வொரு மாதமும் ரூ.250 கோடி பணப்பரிவர்த்தனை நடக்கும் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இத்தாலி பிரதமர் கியூசெபே கான்டிபிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
 | 

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் மோடி

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் மோடி

ஒவ்வொரு மாதமும் ரூ.250 கோடி பணப்பரிவர்த்தனை நடக்கும் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

டில்லியில் நடைபெற்று வரும் இந்தியா-இத்தாலி இடையிலான தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது,  உலகம் 4வது டிஜிட்டல் புரட்சி பற்றி பேசி வருவதாகவும், இந்தியாவும், இத்தாலியும் தங்களுடைய திறமையின் அடிப்படையில், மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக செயல்படுகின்றன எனவும் குறிப்பிட்டார். 
மேலும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து, மாதந்தோறும் ரூ.250 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் 1ஜிபி இணைய கட்டணம் 90 சதவீதம் குறைந்து உள்ளதாகம் பேசினார். 

தொழில்நுட்பத்தில் இத்தாலி சுயசார்பு பெற்றுள்ளது நமக்கு நம்பிக்கை தருவதாகவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்வதேச சவால்களை சமாளிக்க இரு நாடுகளும் கூட்டணி அமைக்கலாம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, இத்தாலி பிரதமர் கியூசெபே கான்டிபிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP