பெருநிறுவனங்களுக்கான வரி விதிப்பு வரம்பு ரூ.400 கோடியாக அதிகரிப்பு

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 கோடி மொத்த வர்த்தகம் செய்யும் பெருநிறுவனங்களுக்கு தற்போது 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு வரம்பு தற்போது ரூ.400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 | 

அதாவது இனி ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் பெருநிறுவனங்களும் இந்த வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவதாக, மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், "ஸ்டார்ட்-அப்" திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், அவற்றுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

மேலும்,  ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இக்கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் மானியமும் அளிக்கப்படும் எனறு மத்திய நிதியமைச்சர் கூறினார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP