முக்கிய அறிவிப்பு: அக்டோபரில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை...அலார்ட்டா இருங்கப்பா...!

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை என்பதால், வங்கிகள் 20 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். இதனால், வாடிக்கையாளார்கள் தங்களின் வங்கி வேலைகளை செய்ய இப்போதே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
 | 

காந்தி ஜெயந்தி, தசரா, தீபாவளி மற்றும் பிற தேசிய விடுமுறைகள் காரணமாக வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த தேசிய விடுமுறைகள் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தேதிகள் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியிலும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திலும் வேறுபடலாம். 

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, அக்டோபர் விடுமுறை பட்டியல் இரண்டாவது மற்றும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளை உள்ளடக்கி உள்ளது மற்றும் அவை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பொது விடுமுறை நாட்களில் பிரத்தியேகமானவை ஆகும்.

அக்டோபரில், பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் , வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மொத்தம் 11 விடுமுறைகள் உள்ளது. இதன் விளைவாக, வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அக்டோபர் மாதத்தில் 20 நாட்களில் மட்டுமே திறந்திருக்கும்.

இதனால், எந்தவொரு வேலை தொடர்பாக அக்டோபர் மாதத்தில் உங்கள் வங்கியைப் பார்வையிட திட்டமிட்டால், வங்கி விடுமுறைகளின் பட்டியலை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள். மேலும், அக்டோபரில் விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை அந்தந்த வங்கிகளைப் சென்று பார்த்துவிடுங்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP