நான் ஒன்றும் திருடன் அல்ல - மல்லையா

நான் எங்கிருந்தாலும், எனது கோரிக்கையெல்லாம் வங்கிகள் நான் திருப்பியளிக்கும் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. ஏனெனில், நான் திருடன் போல நாசித்தரிக்கப்படுவதைத் தடுக்க விரும்புகிறேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
 | 

நான் ஒன்றும் திருடன் அல்ல - மல்லையா

என்னை திருடன் போல சித்தரிப்பதை தடுப்பதற்காகவே, வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த தயார் என்று கூறியதாக தொழிலதிபர் விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார். இதில் வேறெந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்தது தொடர்பான வழக்கு இவர் மீது நிலுவையில் உள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில், துபாயில் இருந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலையில் டுவிட்டரில் பதிவிட்ட விஜய் மல்லையா, வங்கிகளில் தான் பெற்ற கடனுக்கான அசல் தொகையை 100 சதவீதம் திருப்பிச் செலுத்த தயார் என்று கூறியிருந்தார்.

லண்டனில் உள்ள மல்லையாவையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், மைக்கேலுக்கு ஏற்பட்ட கதியே தனக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் மல்லையா, கடனை திருப்பி அடைப்பதாகக்  கூறியுள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் டுவிட்டரில் மல்லையா மீண்டும் பதிவிட்டுள்ளார்.

அதில், “மரியாதைக்குரிய விமர்சகர்களே, நான் நாடு கடத்தப்படுவது தொடர்பான முடிவு  அல்லது துபாயில் இருந்து நாடு கடத்தி கொண்டு வரப்பட்டவர் என இந்த இரண்டையும், நான் கடனை திருப்பிச் செலுத்துவதாகக் கூறியதோடு எப்படி முடிச்சுப் போடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. நான் எங்கிருந்தாலும், எனது கோரிக்கையெல்லாம் வங்கிகள் நான் திருப்பியளிக்கும் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. திருடன் போல நான் சித்தரிக்கப்படுவதைத் தடுக்க விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP