யு.பி.எஸ்.சி தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஐஐடி பட்டதாரிகள்!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
 | 

யு.பி.எஸ்.சி தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஐஐடி பட்டதாரிகள்!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,  ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்தப் பணிகளுக்கு, முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய 3 கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில், சிவில் சர்வீஸ் பணிகளுக்கு 2018ம் ஆண்டு 812 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த தேர்வுக்கு, மொத்தம் 4 லட்சத்து 93 ஆயிரத்து 972 பேர் விண்ணப்பித்தனர். அதில், 10 லட்சத்து 65 ஆயிரத்து 552 பேர் முதல்நிலை தேர்வை எழுதினர். அதில், 10,468 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். அதில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு 1,994 பேர் சென்றனர். 

இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று (ஏப்ரல் 5) வெளியானது. இதில், 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 577 ஆண்கள்; 182 பேர் பெண்கள். இந்த தேர்வில், மும்பை ஐஐடியில் பி.டெக் படித்த கனிஷ்க் கட்டாரியா என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் முதன்மைத்தேர்வில் கணித பாடப்பிரிவை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார். இவரது தந்தையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.

அக்ஷந் ஜெயின், சிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், ஐஐடி கவுகாத்தியில் படித்துள்ளார். இவரது தந்தை ஐபிஎஸ் அதிகாரி. தாயார் இந்திய வருவாய்துறை அதிகாரி. 

ஸ்ருஸ்தி தேஷ்முக் பெண்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மொத்தமாக 5ம் இடத்தில் உள்ளார், இவர் எம்.பில் பட்டதாரி. இவர் முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் இவர் தான். இவரது தந்தை என்ஜினீயர், தாய் பள்ளி ஆசிரியர். தனது மேல்வைத்த நம்பிக்கையின் காரணமாகவே இன்று தனக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கூறுகிறார். 

மேலும், முதல் 25 இடங்களில் 15 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்கள் மட்டும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP