காஷ்மீர் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்! -ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் பதில்!

ஜம்மு-காஷ்மீர் மீதான நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா குறித்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீர் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்! -ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் பதில்!

ஜம்மு-காஷ்மீர் மீதான நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் என்பவர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால், காஷ்மீர் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், இதனால் ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை போய்விட்டது என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இதன் பின்புலத்தை பற்றி ஆராய்ந்தால், இவர் தாத்ரா நகர் ஹவேலி, டையூ டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பணிபுரிந்த இவர், பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த ஜூலை மாதமே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கும் சூழ்நிலையில், அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பின் நாளில் கேட்கப்படும் போது, காஷ்மீர் பற்றி பேசியதால் தான் மத்திய அரசாங்கம் என் மீது நடவடிக்கை எடுக்கிறது என்று அவர் காரணம் தெரிவிக்கவே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் மக்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பு கிடைக்கும் என்றும் அவர் கருதியிருக்கலாம். அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை ஏற்கனவே நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மத்திய முன்னாள் அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, ஐ.ஏ.எஸ் அதிகாரி செய்தது ஆணவத்தின் உச்ச கட்டம் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையிலேயே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மீதான நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தரமான ஒரு நல்ல முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. நாட்டுக்கு எதிராக செயல்படுவதற்கு பதிலாக யாருக்கு ஆதரவு அழைக்கிறீர்களோ அங்கு சல்லுங்கள் என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP