குரான் விநியோகித்தால் ஜாமின்: இந்தியாவில் தான் இந்த தீர்ப்பு!

இஸ்லாமிய இளைஞர் தப்ரீஸ் அன்சாரி தொடர்பாக டிவிட்டிரில் நடைபெற்ற வாக்குவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவி ஐந்து குரான் புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி ராஞ்சி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சமூக வலைதளங்கில் தீவிரமாகக் கருத்து பரவி வருகிறது.
 | 

குரான் விநியோகித்தால் ஜாமின்: இந்தியாவில் தான் இந்த தீர்ப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா - கர்ஸ்வான் (Seraikela-Kharswan) என்ற மாவட்டத்தில், பைக் திருட வந்த தப்ரீஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞரை கையும் களவுமாகப் பிடித்த அப்பகுதி மக்கள், அவரை மரத்தில் கட்டி வைத்து  அடித்தனர். 

திருட வந்த நபர் குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தையடுத்து, காவல்துறையினர் அங்கு வந்து தப்ரீஸ் அன்சாரியை கைது செய்து அழைத்துச் சென்றனர். நீதிமன்றக்காவலில் இருந்த அன்சாரி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சமூக வலைதளங்களில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் கூறுமாறு சொல்லி கிராம மக்கள் அந்த இளைஞரை தாக்கினர், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது . ஆனால் உடற்கூறு ஆய்வறிக்கையில் தப்ரீஸ் அன்சாரி மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குரான் விநியோகித்தால் ஜாமின்: இந்தியாவில் தான் இந்த தீர்ப்பு!

அப்போது, இதுகுறித்த சமூக வலைதள உரையாடலில், 'தப்ரீஸ் அன்சாரி மரணத்திற்கு பழிவாங்க அன்சாரியின் மகன் பயங்கரவாதியானால் என்ன செய்வீர்கள்?' என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிச்சா பாரதி என்ற இளங்கலை முதலாமாண்டு படித்து வரும் மாணவி ' தங்கள் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் வாரிசுகள் எவரும் இதுவரை  பயங்கரவாதியாகவில்லையே!  அது ஏன்?' எனக் கேள்வியெழுப்பியிருந்தார். 

இதையடுத்து, Sadar Anjuman Committee என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைமையில் இஸ்லாமியர்கள் பெரும் திரளாகச் சென்று, மாணவிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். புகார் பெறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அந்த பெண் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட் மனிஷ் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ரிச்சா பாரதி, ஐந்து குரான் புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.  

உடனே மாணவி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீதிமன்றத்திலேயே, " எனக்கு ஜாமீன் வழங்குவதற்கு நிபந்தனையாக, இன்று குரான் நூலை விநியோகிக்கச்  சொல்வீர்கள், நாளை நமாஸ் செய்ய சொல்வீர்கள், அடுத்து இஸ்லாமியராக மதம் மாறு என்று நிபந்தனை விதிப்பீர்கள்.

மேலும் எனக்கு கொடுத்த தீர்ப்பு மாதிரி, தீவிரவாதத்துக்கு ஆதரவாக பதிவிட்டவர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்க நிபந்தனையாக அவர்களை ஹனுமான் சாலீஸ் படிக்க சொல்லுமா இந்த நீதிமன்றம்? இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறியதையடுத்து அவருக்கு பெயில் வழங்காமல்,  மாணவி ரிச்சாவை சிறையிலடைக்குமாறு நேற்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

குரான் விநியோகித்தால் ஜாமின்: இந்தியாவில் தான் இந்த தீர்ப்பு!

அதையடுத்து நேற்று மாலையிலிருந்து நீதிபதியின் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

மேலும், நீதிபதி மனிஷ் சிங் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்ட வழக்கறிஞர்கள் கவுன்சில் கூடி  தீர்ப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு, அவர் தீர்ப்பை கைவிடும்வரை அவர் விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்றத்தை நாங்கள் புறக்கணிப்போம் என்று  பார் கவுன்சிலில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

அதுபோல, வழக்கமாக ஒரு வழக்கின் தீர்ப்பு அந்த நீதிமன்ற இணையத்தளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படும். ஆனால், மாணவி ரிச்சா பாரதி வழக்கின் தீர்ப்பு அரசியலமை நடைமுறைக்கு விரோதமாக இருப்பதாக நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து பலரிடமிருந்து கண்டனங்கள் வெளியாகி வரும் காரணத்தால் இதுவரை  தீர்ப்பின் நகல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

ராஞ்சி நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் இந்த தீர்ப்புக்கு தேசிய சிறுபான்மையினர் நல கமிஷனும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அலாக் அலோக் ஸ்ரீ வத்ஸவா என்ற உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், மாணவி ரிச்சா பாரதிக்கு ஆதரவாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், CRPC 482ன்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக இருப்பதால், மாணவிக்கு ஆதரவாக கட்டணமின்றி, ராஞ்சி உயர்நீதிமன்றத்துக்கு நேரடியாக வந்து தான் வாதிட தயாராக இருப்பதாகவும், எந்நேரத்திலும் ரிச்சா பாரதி, 9871414446 இந்த மொபைல் எண் மூலமாக தன்னை தொடர்புகொள்ளலாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும்,  இதுபோன்று தொடர்ந்து வழக்கறிஞர்கள் பலர் மாணவிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இதனால் இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP