பாலகோட் தாக்குதலின்போது ரஃபேல் இருந்திருந்தால் பாகிஸ்தான் சென்றிருக்க வேண்டாம்: ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர்விமானம் இருந்திருந்தால் பாலகோட் வான்வெளிதாக்குதலுக்காக பாகிஸ்தான் சென்றிருக்க தேவையில்லை என ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

ஹரியானா மாநிலம் கர்னலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் போர்விமானம் இருந்திருந்தால் பாலகோட் வான்வெளிதாக்குதலுக்காக பாகிஸ்தான் சென்றிருக்க தேவையில்லை என்றும், இந்தியாவில் இருந்துகொண்டே பாலகோட்டி தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் தெரிவித்தார். 

மேலும், "ரஃபேல் விமானம் வாங்க சென்ற போது போர் விமானத்தின் மீது ஓம் என எழுதினேன். அதோடு ஒரு ரக்ஷா பந்தனை கட்டினேன். அதை வைத்து காங்கிரஸ் தலைவர்கள் இங்கே சர்ச்சையை தொடங்கிவிட்டார்கள். ரஃபேல் விமானம் வருவதை வரவேற்காமால், விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் பாகிஸ்தானை பலப்படுத்துகின்றன" என கூறினார். 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP