அமித் ஷாவுக்கு மாட்டிறைச்சி பிரியாணி அனுப்புவேன்: ஒவைசி பேச்சு

பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு மாட்டிறைச்சி பிரியாணி அனுப்புவதாக அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாடுல்-முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
 | 

அமித் ஷாவுக்கு மாட்டிறைச்சி பிரியாணி அனுப்புவேன்: ஒவைசி பேச்சு

பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு மாட்டிறைச்சி பிரியாணி அனுப்புவதாக அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாடுல்-முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியுள்ளார். 

ஐதராபாத் பொதுக் கூட்டத்தில் பேசிய அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாடுல்-முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, ''சந்திர சேகர ராவ் முஸ்லிம்கள் அனைவருக்கும் பிரியாணி அனுப்புகிறார் என அமித் ஷா மிகவும் வருத்தப்படுகிறார். எனக்கு உண்மையாகவே அமித் ஷாவுக்கு பிரியாணி பிடிக்கும் என்று தெரியாது. மாற்றவர் சாப்பிட்டால் உங்களுக்கு வயிறு வலிக்குதென்றால், உங்களுக்காக நானே கல்யாண பிரியாணி (மாட்டிறைச்சியின் வழக்காடு சொல்) அனுப்பி வைக்கிறேன் '' என்றார். 

அதோடு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், ஷரீப் மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அதுவும் அழைப்பு இல்லாமலேயே மோடி சென்றார். எனவே அப்போது ஷெரீப்பால் மோடிக்கு என்ன உணவு கொடுத்திருக்க முடியும் என்று அவதூறாக பேசியுள்ளார். இவரது பேச்சி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. 

தெலங்கானா பொறுப்பு முதலமைச்சராக இருக்கும் சந்திர சேகர ராவ்,  மஜ்லிஸ்-இ-இத்தெஹாடுல்-முஸ்லிமீன் கட்சியை தோழமைக் கட்சியாக கூறிவருகிறது. ஆனால் இந்தக் கட்சி கூட்டணி பேச்சுக்கு இடம் தரவில்லை. தெலங்கானா சட்டப்பேரவையில்  அசாதுதீன் ஒவைசியின் கட்சி 7 எம்.எல் .ஏக்களை கொண்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP