இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியத்தை பார்த்து வியந்தேன்- பிரதமர் மோடி

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியத்தை பார்த்து நான் வியந்ததாக பிரதமர் நரேந்திர மோடியில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் பேசியுள்ளார்.
 | 

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியத்தை பார்த்து வியந்தேன்- பிரதமர் மோடி

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியத்தை பார்த்து நான் வியந்ததாக பிரதமர் நரேந்திர மோடியில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் பேசியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமை இடத்திற்கு சென்றார். சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டு இன்று காலை நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து இருந்து சிக்னல் கிடைக்காததால் பின்னடைவைச் சந்தித்தது. பின்னர் இஸ்ரோவின் தலைவர் சிவனுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

இதன்பின்னர் இன்று பிற்பகல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மும்பை மெட்ரோ ரயிலை திறந்துவைத்து அதில் பயணித்தார். அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனிருந்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இஸ்ரோவின் விஞ்ஞானிகளிடம் இருந்து நாம் தைரியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் அவர்களின் தைரியத்தை பார்த்து நான் வியந்தேன். அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சந்திராயன் 2 பணியில் அவர்களின் பணி மகத்தானது. அவர்களால் இந்திய நாடே பெருமை கொள்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP