சந்திராயன் - 2 மூலமாக இரண்டு பாடங்களை கற்றுக்கொண்டேன்: பிரதமர் மோடி

நம்பிக்கை மற்றும் பயமின்மை என்ற இரண்டு பாடங்களை தான் சந்திராயன் 2 விண்கலம் மூலமாக கற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

சந்திராயன் - 2 மூலமாக இரண்டு பாடங்களை கற்றுக்கொண்டேன்: பிரதமர் மோடி

நம்பிக்கை மற்றும் பயமின்மை என்ற இரண்டு பாடங்களை தான் சந்திராயன் 2 விண்கலம் மூலமாக கற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "விண்வெளி துறையில், 2019ம் ஆண்டு இந்தியாவிற்கு பலன் அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம், விரைவில் நிலவில் தரையிறங்குவதை காண நாம் அனைவருமே ஆவலோடு காத்திருக்கிறோம். நான் சந்திராயன் 2 விண்கலம் மூலம் இரண்டு பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன். நம்பிக்கை மற்றும் பயமின்மை. நாம் நமது திறமை மீது எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும். 

ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்தியாவின் விண்வெளி திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த வினாடி வினா போட்டி நடைபெற இருக்கிறது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். இதற்கான விவரங்களை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் MyGov website என்ற இணையதளத்தில் காணலாம். 

தொடர் கனமழை மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றும். 

அமர்நாத் யாத்திரைக்கு கடந்த 4 ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் அதிகளவு யாத்ரீகர்கள் சென்று வந்துள்ளனர். இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த காஷ்மீர் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP