கிழங்கை தங்கமாக மாற்றும் மெஷின் என்னிடம் இல்லை: மோடி கிண்டல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியது போல், உருளைக்கிழங்குகளை தங்கமாக மாற்றும் மெஷின் தன்னிடம் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் அடித்துள்ளார்.
 | 

கிழங்கை தங்கமாக மாற்றும் மெஷின் என்னிடம் இல்லை: மோடி கிண்டல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் வைத்திருப்பது போல், உருளைக்கிழங்குகளை தங்கமாக மாற்றும் மெஷின் தன்னிடம் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்  அடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று, உத்தர பிரதேச மாநிலத்தில் கன்னூஜ் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு நடைபெற்ற  பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகள், பாஜக ஆட்சியினால் பயன் பெற்றுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் பயிரிடும் உருளைக்கிழங்கிற்கு தரமான, சரியான விலை நிர்ணயம் செய்யப்படும். 

கிழங்கை தங்கமாக மாற்றும் மெஷின் என்னிடம் இல்லை: மோடி கிண்டல்!

ஆனால், சிலர் கூறியது போல், உருளைக்கிழங்குகளை தங்கமாக மாற்றும் மெஷின் என்னிடம் இல்லை. கடந்த 2017ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போது ஒருவர் கூறினார். தன்னிடம் ஒரு நவீன மெஷின் உள்ளது என்றும், அதில் ஒரு பக்கம் உருளைக்கிழங்குகளை போட்டால் மறுபக்கம் அதனை தங்கமாக மாற்றிக்கொடுக்கும் என்றார். என்னிடம் அந்த மெஷின் இல்லை.

என்னால் அதுபோன்று 'மேஜிக்' செய்ய முடியாது.  ஏனென்றால் என்னால் பொய் சொல்ல முடியாது; பாஜக இதுவரை பொய்யான வாக்குறுதிகளை அளித்ததில்லை. ஒருபோதும் அதுபோன்று பொய் வாக்குறுதிகளை அளிக்காது. அதே நேரத்தில் விவசாயிகள் பயிரிடும் பொருட்களுக்கு ஆதார விலை சரியாக நிர்ணயம் செய்யப்படும்" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP