மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதிவியேற்க நான் தயார்!!

மகாராஷ்டிரா மாநில அரசியல் சச்சரவுகள் முடிவடையும் வரை முதலமைச்சர் பதவியில் அமர்ந்து ஆட்சி புரிய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் அம்மாநில பீத் மாவட்டத்தை சேர்ந்து ஓர் விவசாயி.
 | 

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையிலும், முதலமைச்சர் பதிவியில் யார் அமர்வது என்ற கருத்து வேறுபாடினால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், "இயற்கையின் சீற்றத்தால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் அங்கு விவசாயிகள் அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சி, முதலமைச்சர் பதவிக்காக சண்டையிட்டு கொண்டிருக்கிறது. இந்நிலை தொடருமாயின் பாஜக-சிவசேனா கட்சி ஓர் தீர்மானத்திற்கு வரும் வரை முதலமைச்சர் பதவியை எனக்கு வழங்குங்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க நான் முயற்சிக்கிறேன்" என்று பீத் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார் அம்மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு கடாலே என்னும் விவசாயி.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதிவியேற்க நான் தயார்!!

மேலும், இவரது கோரிக்கைக்கு அரசு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தால், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த தயாராக உள்ளதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார் விவசாயி விஷ்ணு கடாலே.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP