அரசியல் சாசனத்தை காக்கவே போராடுகிறேன்: குமாரசாமி

அரசியல் சாசனத்தை காக்கவும், சபாநாயகரின் உரிமையை பாதுகாக்கவும் தான் போராடுகிறேன் என்று முதலமைச்சர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.
 | 

அரசியல் சாசனத்தை காக்கவே போராடுகிறேன்: குமாரசாமி

அரசியல் சாசனத்தை காக்கவும், சபாநாயகரின் உரிமையை பாதுகாக்கவும் தான் போராடுகிறேன் என்று முதலமைச்சர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  இதில், காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏக்கள் 13 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் அடங்குவர்.

இதையடுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. தீர்மானத்தின் மீது முதலமைச்சர் குமாரசாமி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், "கூட்டணி ஆட்சியை தொடர்வது குறித்து நான் எதுவும் பேசவில்லை. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றே பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் நினைக்கின்றனர். 

அரசியல் குழப்பத்திற்கு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தான் காரணம். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டணி ஆட்சி குறித்து தொடக்கம் முதலே சிலர் தவறான தகவல் பரப்பினர். என் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

அரசியல் சாசனத்தை காக்கவும், சபாநாயகரின் உரிமையை பாதுகாக்கவும் தான் போராடுகிறேன்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP