ஹைதராபாத்- குளியலறைக்குள் சிக்கி நான்கு நாட்கள் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் பிழைத்த சிறுமி!

தெலுங்கானா மாநிலத்தில் பக்கத்து வீட்டு குளியலறைக்குள் தவறி விழுந்த, 7வயது சிறுமி நான்கு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
 | 

ஹைதராபாத்- குளியலறைக்குள் சிக்கி நான்கு நாட்கள் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் பிழைத்த சிறுமி!

தெலுங்கானாவில் பக்கத்து வீட்டு குளியலறைக்குள் தவறி விழுந்த, 7வயது சிறுமி அங்கிருந்த தண்ணீரை குடித்து 4 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில், இன்று  உயிருடன் மீட்கப்பட்டார். 

தெலுங்கானாவின் நாராயணபேட் மாவட்டத்தில் உள்ள மேக்தல் நகரத்தில்,  அகிலா என்ற 7வயது சிறுமி, அங்கு உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் மேல் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி பக்கத்து வீட்டு குளியலறைக்குள் கடந்த 20ம் தேதி விழுந்து விட்டார்.

பக்கத்து வீட்டு குளியலறையின் மேல் போடப்பட்டிருந்த தகரசீட் உடைந்ததால் மாணவி குளியலறைக்குள் விழுந்துவிட்டார். ஆனால் உள்ளே விழுந்ததில் அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை. குளியலறைக்குள் துவைப்பதற்கு துணிகள் வைத்திருந்ததால் சிறுமி அகிலாவிற்கு காயம் எதுவும் ஏற்படாமல் தப்பித்துள்ளார். 

அந்த வீட்டின் உரிமையாளரான பள்ளி ஆசிரியர்  வெங்கடேஷ் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்றுள்ளார். மேலும் அவர் யாராவது காப்பாற்றுங்கள் என பலமுறை குரல் எழுப்பியும் அக்கம் பக்கத்தில் எவரும் இல்லாத காரணத்தால் அவரது கூக்குரல் யார் காதிலும் விழவில்லை.

இதனால் மாணவி அகிலாவை யாருமே வெளியில் மீட்பதற்கு யாரும் இல்லாத சூழல் நிலவியுள்ளது. அந்நிலையில் பசிக்கும் நேரத்தில் மாணவி அகிலா பத்ரூம் பைப்பில் வந்த தண்ணீரை மட்டும் குடித்தபடி 4 நாள்கள் உயிருக்கு போராடி இருந்துள்ளார்.

இதற்கிடையே மாணவி அகிலாவின் பெற்றோர், மேக்தல் நகர போலீசில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை தேடிவந்தனர். ஆனால் மாணவியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடைய 4 நாள்கள் கழித்து மாணவி அகிலா தவறிவிழுந்த வீட்டின் உரிமையாளர் வெங்கடேஷ், ஊர் திரும்பி வீட்டை திறந்துள்ளார். அங்கு குளியலறைக்குள் செல்ல அவர் முயன்றபோது மாணவி மயங்கி நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அகிலாவின் பெற்றாேருக்கு தகவல் தந்த வெங்கடேஷ், உடனடியாக சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு சிகிச‌்சை அளிக்கபட்டு வருகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP