200 ஆண்டுகளில் பிரிட்டீஷார் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றது எவ்வளவு தெரியுமா: ஜெய்சங்கர் கேள்வி!!

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த 200 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிவை கண்டதாக பல ஆய்வுகளும், அறிக்கைகளும் தெரிவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
 | 

200 ஆண்டுகளில் பிரிட்டீஷார் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றது எவ்வளவு தெரியுமா: ஜெய்சங்கர் கேள்வி!!

"இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த 200 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிவை கண்டதாக பல ஆய்வுகளும், அறிக்கைகளும் தெரிவிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

கடந்த ஆண்டு, உட்சா பட்னாயக் மேற் கொண்ட ஒரு ஆய்வில், ஆங்கிலேயர்கள், 45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியா பொருளாதாரத்தை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, பல இந்திய தலைவர்கள் உலக மாநாடுகளில் இதை குறிப்பிடத் தொடங்கினர். முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர் இதை மேற் கோடிட்டு "இருள் சூழ்ந்த சகாப்தம் - ஆங்கிலேயர்களின் பிடியில் இந்தியா" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், இந்திய நெசவாளர்கள் ஆங்கிலேயர்களிடம் அனுபவித்தத் துயரங்கள் குறித்தும், இந்தியர்களின் அப்போதைய நிலை குறித்தும் விளக்கமாக குறிப்பிட்டிருந்தார். இவரை தொடர்ந்து தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஆங்கிலேயர்கள் ஆட்சியல் இந்தியர்களின் நிலை குறித்து அட்லாண்டிக் கவுன்சில் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

"18ஆம் நாற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்களது வருகைக்கு முன்னர், உலக பொருளாதாரத்தில் 27 சதவீதம் வகித்த இந்தியா,190 வருட ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தன்னுடைய வளர்ச்சியை இழந்து, பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவை கண்டது. 2 நூற்றாண்டுகள் பிரிட்டிஷ் பிடியில் இந்தியா பல வகையான அவமானங்களையும், துயரங்களையும் காண வேண்டியிருந்தது. பல ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் குறிப்பிடுவது போல ஆங்கிலேயர்கள் 200 வருட ஆட்சி காலத்தில், இந்தியாவின் பொருளாதாரத்தை முழுவதுமாக சுரண்டிச் சென்று விட்டனர். கடந்த ஆண்டு, உட்சா பட்னாயக் ம்ற் கொண்ட ஆய்வில், ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து 45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை சுரண்டி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும், மும்பையில் நடந்த, உலக இந்து பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "200 ஆண்டுகளுக்கு முன் உலகிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக திகழ்ந்தது இந்தியா. நம் பொருளாதார நிலை கண்டு உலகமே வியந்தது. முகலாயர்கள் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே, இந்தியா, உலக பொருளாதாரத்தில் 36 சதவீதம் வகித்திருந்தது. இவர்கள் ஆட்சியின் முடிவில் அது 20 சதவீதமாக குறைந்து, ஆங்கிலேயர் ஆட்சி முடிவில் முழுவதுமாக போய் விட்டது. இந்திய பொருளாதாரத்தை சுரண்டியதே ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் தான்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP