உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய உளவுத்துறை ரா-வின் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
 | 

காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில், 49 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் பின்புலமாக செயல்பட்டதாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய உளவுத்துறை ரா-வின் தலைவர் அனில் தஸ்மானா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா உள்ளிட்ட மூத்த உளவுத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து ஒரு அறிக்கையை தயார் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையை, சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு செல்லும் நிதி குறித்து கண்காணிக்கும் FATF-இடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP