ஜம்மு - காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை: மக்கள் வெளியேற்றம்

இந்தியா - பாக்., இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
 | 

பாக்., பயங்ரவாத முகாம் மீது நம் விமானப் படை தாக்குதல் நடத்தியை தொடர்ந்து, பாக்., ராணுவம் நம் எல்லை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, எல்லையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். 

இதனால், எல்லையில் பதற்றம் அதிரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP