வாக்கெடுப்பை இன்றே நடத்துக: சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
 | 

வாக்கெடுப்பை இன்றே நடத்துக: சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் காணாமல் போனதாகவும், அவரை பாஜகவினர் தான் மும்பைக்குக் கடத்திச் சென்றுள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 

தங்களது தரப்பு எம்.எல்.ஏக்கள் 20 பேர் இன்று பேரவைக்கு வராத காரணத்தினாலும், உச்ச நீதிமன்ற உத்தரவில் கொறடா உத்தரவு குறித்து சரியான விளக்கம் இல்லாததாலும் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று  காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். 

இதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, சபாநாயகர் திட்டமிட்டே வாக்கெடுப்பை தாமதப்படுத்துகிறார் என்று பாஜகவினர் அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். 

ஆளுநர் அளித்த கடிதத்தை சபாநாயகர் பேரவையில் படிக்கும்போது, ஆளும்கட்சியினர் கடும் கூச்சலிட்டனர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP