வரலாற்று பிழை இன்று திருத்தப்பட்டுள்ளது : பிரதமர் பெருமிதம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதா மூலம், முஸ்லிம் பெண்கள் மீது இழைக்கப்பட்டு வந்த வரலாற்று பிழைகள் திருத்தப்பட்டுள்ளன என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
 | 

வரலாற்று பிழை இன்று திருத்தப்பட்டுள்ளது : பிரதமர் பெருமிதம்

முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்மசோதா நிறைவேறியுள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

பழைமைவாத சிந்தனையுடன், முஸ்லிம் சமூக பெண்கள் மீது இதுநாள்வரை திணிக்கப்பட்டு வந்த தலாக் முறை இன்று தூக்கியெறியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதா மூலம்,  முஸ்லிம் பெண்கள் மீது இழைக்கப்பட்டு வந்த வரலாற்று பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. 
அத்துடன்,  பாலின பாகுபாடு கலையப்பட்டு சமூக சமநீதி மேலும் நிலைநாட்டப்படும். மொத்தத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை  ஒட்டுமொத்த தேசமே இன்று கொண்டாடி வருகிறது என பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP