Logo

ஹிந்தி தான் இந்திய மக்களை ஒன்று படுத்தும்: அமித்ஷா கருத்துக்கு ரன்தீப்

நம் தாய்மொழியாகிய ஹிந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு இந்திய நாட்டின் மொழியாக ஹிந்தி இருக்க முடியாது என ஏ.ஐ.எம்.ஐ.எம் - ன் தலைவர் அசாதுதின் ஒவாய்ஸி தெரிவித்துள்ளார்.
 | 

ஹிந்தி தான் இந்திய மக்களை ஒன்று படுத்தும்: அமித்ஷா கருத்துக்கு ரன்தீப் சிங் ஆதரவு

நம் தாய்மொழியாகிய ஹிந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என்ற  உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு, இந்திய நாட்டின் மொழியாக ஹிந்தி இருக்க முடியாது என ஏ.ஐ.எம்.ஐ.எம் - ன் தலைவர் அசாதுதின் ஒவாய்ஸி தெரிவித்துள்ளார். 

ஹிந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழி உண்டு என்றால் அது ஹிந்தியாக தான் இருக்கும். ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த முடியும்" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் - ன் தலைவர் அசாதுதின் ஒவாய்ஸி, ஹிந்தி, எல்லா மக்களின் தாய்மொழி இல்லை என்றும், இந்தியா ஹிந்தி, இந்து, இந்துத்துவம் இவை மட்டும் கொண்டதல்ல, இந்தியாவில் இவை மூன்றையும் தாண்டி நிறைய உள்ளன என்று அமித் ஷாவின் பதிவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவை இந்துத்துவக் கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்ப்பதை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ரன்தீப் சிங் தனது ட்விட்டர் பதிவில், "ஹிந்தி தான் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று படுத்தும். ஹிந்தி மொழி யின் மேம்பாட்டிற்கு உதவும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த "ஹிந்தி தின" வாழ்த்துக்கள்" என அமித் ஷா கருத்தை ஆதரிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

செப்., 14 1949 - ல் இந்திய சட்டசபையில், ஹிந்தி மொழி நம் நாட்டின் அதிகாரப் பூர்வமான  மொழியாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 26, 1950 - ல் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவின் 22 முக்கிய மொழிகளில் ஹிந்தி மொழியும் ஒன்று.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP