அசாம், பீகாரில் கனமழை: லட்சக்கணக்கான மக்கள் தவிப்பு!

அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை நீடித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
 | 

அசாம், பீகாரில் கனமழை: லட்சக்கணக்கான மக்கள் தவிப்பு!

அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை நீடித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

அசாம், பீகார், மேகாலயா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அசாம், பீகார் மாநிலங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  பீகார் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், அசாமில் 19 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அசாம், பீகார் மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றும் அசாம், பீகாரில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேகாலயா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹைரியானா, சண்டிகர், டெல்லி, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP