அசாம், பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 200யைத் தொட்டது!

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
 | 

அசாம், பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 200யைத் தொட்டது!

அசாம் மற்றும் பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

அசாம் மற்றும் பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக பீகாரில் உள்ள 13 மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து சேவை, மின்சேவை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் லட்சக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பல்வேறு வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மீட்பு படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP